Top News

சம்பூரில் அமையவுள்ள அனல் மின்சாரத்திட்டமும் அதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களும் சம்பந்தமான கலந்துரையாடல்

மூதூர் பிரதேசசெயலகப் பிரிவில்  சம்பூரில்  அமையவுள்ள அனல் மின்சாரத்திட்டமும்  அதனால் பொதுமக்களுக்கு  ஏற்படும்  பாதிப்புக்களும் சம்பந்தமான கலந்துரையாடலொன்று  (7.03.2016) மூதூரில் இடம்பெற்றது.
மூதூர் பீஸ் ஹோம் அமைப்பின் ஏற்பாட்டில் அமைப்பின் தலைவர் எஸ்.எச்.அமீர் தலைமையில்  திரிசிடி  முனீர் நினைவு மண்டபத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் 25ற்கும் அதிகமான  சமூக நல சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதன்போது அனல் மின்சாரத்திட்டத்தினால் ஏற்படப்போகும் ஆபத்துக்கள் சம்பந்தமாக பொது மக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தல், திருகோணமலை மாவட்ட மக்கள் பிரதி நிதிகனை அழைத்து இத்திட்டத்திற்கு எதிராக பிரேரணை ஒன்றை கொண்டு வரவும் இதனை  நிறுத்துவதற்கு சகல முயற்சிகளை மேற்கொள்ளவும் அழுத்தம் கொடுத்தல், அனல் மின்சார திட்டத்திற்கு எதிராக சட்ட ரீதியான அணுமுறையை மேற்கொள்ளல், திட்டத்திற்கு எதிராக மாவட்டத்திலுள்ள  பொது மக்களை அணிதிரட்டல், இவ்விடயங்களை செம்மையாக செயற்படுத்துவதற்கு செயலணியொன்றை அடுத்த ஒன்றுகூடலின் போது அமைத்தல் முதலான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அனல் மின்சாரத் திட்டத்தை மக்களின் வாழிடங்களுக்கு அண்மையாக மேற்கொள்வதை நிறுத்துமாறு ஆரம்ப காலம் முதல் பிரதேச பொதுமக்களும் சமூக நல அமைப்புகளும் தொடராக கோரிக்கை விடுத்து வந்தபோதும் பொதுமக்களின் விருப்புக்கு எதிராக திட்டத்தை மேற்கொள்வதில்  அரசாங்கம் செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-சேனையூர் நிருபர்-

Previous Post Next Post