அம்பாறை மாவட்டத்தில் உடற் பயிற்சி நடைபாதை அமைப்பதற்கு பிரதி அமைச்சர் ஹரீஸ் நடவடிக்கை

அம்பாறை மாவட்டத்தில் உடற் பயிற்சிக்கான நடைபாதை அமைப்பதற்கான நடவடிக்கையினை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் எடுத்துள்ளார்.
உடற் பயிற்சிக்கான நடைபாதை அமைப்பது சம்பந்தமாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ_க்கும் சுகததாச தேசிய விளையாட்டுத் தொகுதி அதிகார சபையின் தலைவர் பிரிகேடியர் ஜே.எம்.எஸ்.எஸ்.ஜயசுந்தரவுக்குமிடையிலான கலந்துரையாடல் விளையாட்டுத்துறை அமைச்சில் அண்மையில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின்போது பிரதி அமைச்சர் ஹரீஸ்,

அம்பாறை மாவட்ட விளையாட்டு வீரர்களும், பொது மக்களும் உடற் பயிற்சிகளை மேற்கொள்வதற்கும், நீரிழிவு, இரத்த அழுத்தம், உடற் பருமன் அதிகரித்;தோர் முறையான உடற் பயிற்சிகளை மேற்கொள்வதற்கு உடற் பயிற்சி நடைபாதை வசதிகள் இன்றி கஷ்டப்படுவதாக சுட்டிக்காட்டிய பிரதி அமைச்சர், இதனை அமைப்பதற்கான நடவடிக்கையினை உடன் எடுக்குமாறு தலைவர் ஜே.எம்.எஸ்.எஸ். ஜயசுந்தரவுக்கு பணிப்புரை வழங்கினார்.

இப்பணிப்புரைக்கு அமைவாக சுகததாச தேசிய விளையாட்டுத் தொகுதி அதிகார சபையின் தலைவர் பிரிகேடியர் ஜே.எம்.எஸ்.எஸ்.ஜயசுந்தர தலைமையிலான குழுவினர் திங்கட்கிழமை (11) கல்முனைக்கு விஜயம் செய்தனர்.

மேற்படி குழுவினர் முதற் கட்டமாக கல்முனையில் உடற் பயிற்சி நடைபாதை அமைப்பதற்கான இடங்களை பார்வையிட்டனர். இதற்கமைவாக கல்முனை கிறீண்ட் பீல்ட் சுனாமி வீட்டுத்திட்ட தொகுதி, கல்முனை கடற்கரை வீதி பறக்கத் வீச் மற்றும் சாய்ந்தமருது வொலிவேரியன் சுனாமி வீட்டுத்திட்ட தொகுதி ஆகிய இடங்களை பார்வையிட்டதுடன் பூர்வாங்க நடவடிக்கையினையும் மேற்கொண்டனர்.

இக்குழுவில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஏ.எம்.ஜெலீல், இணைப்பாளர் ஏ.தௌபீக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-ஹாசிப் யாஸீன்-
Previous Post Next Post