சம்மாந்துறையில் சாதனை படைத்த 11 மருத்துவபீட மாணவர்கள் உட்பட 54 சாதனையாளர்கள் கௌரவிப்பு விழா

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய (தேசிய) கல்லூரியில் இம்முறை பல்கலைக்கழகம் தெரிவாகி சாதனை படைத்த 11 மருத்துவபீட மாணவர்கள் உள்ளிட்ட 54 சாதனையாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு இன்று புதன்கிழமை காலை ஒன்றுகூடலில் அதிபர் திருமதி.செய்னுலாப்தீன் தலைமையில் நடைபெற்றது.
சம்மாந்துறை சலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் உள்ளிட்ட கல்விப் பணிப்பாளர்கள் முன்னாள் அதிபர் எச்.எம்.பாறூக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அங்கு சாதனையாளர்கள் ஏனைய மாணவர் முன்னிலையில் காட்சிப்படுத்தப்பட்டு உரைகள் நிகழ்த்தப்படுவதைக் காணலாம்.
-நன்றி-எங்கள் தேசம்-
Previous Post Next Post