Top News

பாலமுனை இப்னு ஸீனாவில் கிழக்கு மகாண சுகாதார அமைச்சருக்கு கெளரவிப்பு

அக்கரைப்பற்று வலயத்திற்குட்பட்ட பாலமுனை இப்னூ ஸீனா கனிஷ்ட வித்தியாயத்தின் “செழிப்பூட்டுவோரைக் களிப்பூட்டும்” நிகழ்வு சென்ற புதன்கிழமை (2015.12.02) ஆம் திகதி பாடசாலையின் அதிபர் எஸ்.எம்.ஸாஹிர் ஹூசைன் தலைமையில் பாட்சாலையின் ஆராதணை மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹமட் நஸீர் கலந்துகொண்டார்.

பாடசாலை வரலாற்றில் இதுவரை காலமும் இப்பாடசாலை ஊடாக சாதித்த 70 பேருக்கான நினைவுச்சின்னங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன் அவர்களுக்குள் பாடசாலையின் மூன்றாம் தவணை பரீட்சையில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவர்களுக்கும், அதன் ஆசிரியர்களுக்கும், இவ்வருடம் தரம் ஐந்து புலமைபரிசில் பரீட்சையில் வெற்றியீட்டிய மூன்று மாணவர்களுக்கும் அப்பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கும், பாடசாலைகளின் செயற்பாட்டிற்காக உழைக்கும் கல்வி அதிகாரிகள், அரசியல் தனவாந்தர்கள், அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், நிறுவனங்களுக்கும் நன்றிக்கடன் செலுத்துமுகமாகவே இக்கெளரவம் வழங்கப்பட்டது

நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்ட சுகாதார அமைச்சருக்கும், கிழக்கும் காண சபை உறுப்பினர் தவம் அவர்களுக்கும், முன்னாள் தவிசாளர் அன்ஸின் அவர்களுக்கும் பொண்ணாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டது.

இதன் போது அங்கு உரையாற்றிய சுகாதார அமைச்சர்,

பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், அபிவிருத்தி குழுவின், பெற்றோர்களின் செய்றாட்டினால் பாடசாலை மிகவும் எழுச்சி பெற்றுக்கொண்டிருக்கின்றதுடன் இந்த பாடசாலையின் அபவிருத்தி சம்மந்தமாகவும் குறைநிறைகள் சம்மந்தமாகவும் பாடசாலையின் அதிபரினால் தற்பொழுது என்னிடம் சில கோரிக்கைகள் விடுத்த்துள்ளார் இதற்கமைய பாடசாலையின் அபிவிருத்திறாக எதிர்வரும் வரவுள்ள எனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் இந்தப் பாடசாலைக்கு 4 இலட்சம் ரூபாய் நிதியினை ஒதுக்கீடு செய்கின்றேன்.

எனவும்  இப்பாடசாலையின் குறுகிய கால கல்வி ரீதியிலான வளர்ச்சியை உற்று நோக்கும் போது, இந்த பாடசாலையின் அதிபரின் சிறந்த வழிகாட்டலும் அதனுடன் இணைந்ததாக இப்பாடசாலை ஆசிரியர்களின் ஒத்ழைப்பும் பாடசாலை அபிவிருத்தி குழுவினரின் சிறந்த செயற்பாடாகவும் இருக்கும் என நினைக்கின்றேன்.

ஒரு பாடசாலையில் கல்வி கற்பதற்காக பிள்ளைகளை சேர்த்து விட்டால் மாத்திரம் போதாது. அந்த பாடசாலையின் கல்வி வளர்ச்சியிலும் தமது பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்திலும் பெற்றோர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்  இப்பாடசாலையின் முழு அபிவிருத்தறிகாக தொடர்ந்து இப்பாடசாலையுடன் தொடர்பாக இருக்கவுள்ளேன் என அவர் கருத்து தெரிவித்தார்.

இதேவேளை பாடசாலை அதிபரினால் உதவிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்ததுடன் உதவிய கிழக்கும் மாகாண சுகாத அமைச்சரும் , கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல் தவம் அவர்களுக்கும் , அன்ஸில் அவர்களுக்கும், பாடசாலையின் ஆசிரியர்களுக்கும், பாடசாலையின் அபிவிருத்திக்குழுவினர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நன்றிகளை தெரிவித்து பாடசாலையின் குறைகளையும் அங்கிருந்து அதிதிகளுக்கு தெளிவுபடுத்தினார்.

மற்றும் இப்பாடசாலையின் அதிபர் முன்னர் அதிபராக கடைமையாற்றிய தைக்காநகர் அக்/ஸஹ்றா வித்தியாலத்திற்கு உதவிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல் தவம் அவர்களுக்கு விஷேட நன்றிகளையும் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வுக்கு, கெளரவ அதிதிகளாக கிழக்கு மாகாண உறுப்பினர் ஏ.எல்.தவம், முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ அன்ஸில், அக்கரைப்பற்று வலயக்கல்வி பிரதிக்கல்விப்பணிப்பாளர் அஸ்சேக் ஏ.எம் றஹ்மத்துல்லாஹ் அவர்களுடன் அதிதிகளாக பாட்சாலைகான இணைப்பாளர் அன்சார், மற்றும் முன்னாள் பாடசாலை இணைப்பாளர் சம்சுதீன், முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ், ஆசுகவி அன்புடீன், ஆகியோர் கலந்துகொண்டனர்.
-சப்னி-
Previous Post Next Post