Top News

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலமும் வீதி நாடகமும்(படங்கள்)

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சலரோக தடுப்புப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள  “ நாளைய மாற்றத்திற்காக இன்றே செயற்படுவோம் என்ற தொனிப்பொருளில் “  விழிப்புணர்வு ஊர்வலமும் வீதி நாடகமும்  இடம்பெற்றது .
இதன் போது இந்நிகழ்வில் கலந்து கொண்ட  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை விசேட நீரிழிவு அக்கு சுரப்பு விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தர்ஷினி கருப்பையாப்பிள்ளை கருத்து தெரிவிக்கையில்  தற்போது இலங்கையில் 25 வீதமானோர் நீரிழிவு நோயால்  பாதிப்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிப்பதாகவும் இதற்கு காரணம் நமது அன்றாட உணவு பழக்கவழக்கங்களும்  , முறையான உடல் பயிற்சி இன்மையாலும்  இந்நோய் வர  காரணமாக அமைவதாக தெரிவித்துக்கொண்டார் .

இதனை தெளிவு படுத்தும் முகமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சலரோக தடுப்புப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட விழிப்புணர்வு நிகழ்வுகள் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திலும் அதனை தொடர்ந்து மட்டக்களப்பு காந்தி பூங்கா அருகிலும்  மற்றும் மட்டக்களப்பு மகாஜன கல்லூரியிலும்  இடம்பெற்றது .
இந்த விழிப்புணர்வு நிகழ்வில்   மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை விசேட மகப்பேற்றியல் வைத்திய நிபுணர் வைத்தியர் கே .இ .கருணாகரன் ,விசேட வைத்திய நிபுணர்களான , வைத்தியர் .அகிலன் ,வைத்தியர். ரமேஷ் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் வைத்தியர் பிரணவன் ,விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் .அருண்மொழி ,தாதிய போதனாசிரியர்களான ஜெ . சிறிதரன் ,வி .அற்புதவடிவேல் ,என் .ஜெயசூரியா ,ஜெ . கனகநாயகம் , மற்றும் தாதிய மாணவர்கள் , கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்கள் ஆகியர் கலந்து கொண்டனர்
-Anthony Leon raj-
Previous Post Next Post