நல்லதொரு சமுதாயத்தை உருவாக்க சிறுவர்களை முறையாகப் பராமரிக்க வேண்டும் -சுகாதார அமைச்சர் நஸீர்

சிறுவர்களைப் பராமரித்தல் என்பது இலகுவான விடையமல்ல. தனது குழந்தையைப் பராமரிக்கவே சிலர் கஷ்டப்படும்போது ஆனால் பொறுமையுடன் வேறொருவருடைய குழந்தையை பராமரிக்க சிறந்த மனம் ஏற்பட வேண்டும்.
அதனை நான் இங்கு கானும் போது எனது மனம் சந்தோஷமடைகிறது. என கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத் துறை சிறுவர் பாதுகாப்பு, பராமரிப்பு, கிராமிய மின்சாரம் மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர்  தெரிவித்தார்.

சிறுவர் பராமரிப்பு நிலையம்  09.11.2015 திருகோணமலை துளசி புரத்தில் திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.
மனிதம் இன்றும் உயிருடன் வாழ்கிறது என்றால் இப்படியான நல்ல மனம் கொண்டோரின் இருப்பினால்தான் என்று நினைக்கிறேன். பெற்றோர்களை இழந்த அல்லது பெற்றோர்களால் கைவிடப்பட்ட இப்படியான பச்சிளம் குழந்தைகளின் முகங்களைப் பார்க்கின்றபோது மிகவும் கவலையாக இருக்கிறது. குழந்தைகள் இல்லாத வீடுகளில் இருப்போரைக் கேட்டால் குழந்தையில்லாத குறைகளைப் பற்றி கண்ணீர்மல்கக் கதை சொல்வார்கள். இறைவன் ஒவ்வொருவருக்கும் கொடுக்கும் அருட்கொடைகளாக இருக்கும் குழந்தைகளைக் கண்கானிக்க முடியாமல் பொடுபோக்காக இருக்கும் பெற்றோர் பெரும் பாவம் செய்தவர்கள் என்றே நான் நினைக்கிறேன்.

இப்படியான குழந்தைகளை சரியாகப் பராமரிக்கின்றபோது சிறந்த சமுதாயம் ஒன்றினை உருவாக்க முடியும். சிறுபராயத்தில் குழந்தைகள் வழர்க்கப் படும் முறையிலேயே அவர்களின் ஒழுக்க விழுமியங்கள் தங்கியுள்ளது. எனவே ஒழுக்கம் தவறிவழர்க்கப்படுகின்றபோது சமுதாயத்தில் சீரளியும் ஒருவராக அந்த பிள்ளை மாறிவிடுகிறது. எனவே சிறுபராயத்தில் இருந்து ஒழுக்க விழுமியங்களை சிறப்பாகக் கற்றுக் கொடுத்து சிறந்த சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றினைந்து செயற்படுவோம். நான் பொறுப்பேற்றுள்ள இந்த அமைச்சின் மூலம் இப்படியான குழந்தைகளின் பாதுகாப்புக்காக என்னால் முடிந்த உதவிகளை சரியாகச் செய்வேன் என்று தெரிவித்தார்.

12.2 மில்லியன் நிதியொதுக்கீட்டில் கட்டப்பட்டு திறக்கப்பட்ட இக்கட்டிடத் திறப்பு விழா நிகழ்வு சிறுவர் பராமரிப்பு திணைக்களப் பணிப்பாளர் கங்கா தலைமையில் இடம்பெற்றது. இவ்விழாவில் சுகாதார அமைச்சின் செயலாளர் கருணாகரன், அமைச்சின் உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டண்டனர்.
-சுகாதார அமைச்சின் ஊடகப்பிரிவு-
Previous Post Next Post