அவளின் பெண்குறிக்குள் பலரின் விந்தணுக்கள் இருந்ததால் மரபணுச் சோதனையில் பாரிய சிக்கலாம்

கம்பஹா கொட்டதெனியாவ சேயா சிறுமியின் கொலை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மரபணு பரிசோதனை இரண்டு நாட்களுக்குள் வெளியாகி குற்றமற்றவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.
எனினும் இந்த வருடம் மே மாதம் 18ஆம் திகதியன்று புங்குடுதீவில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வித்யா சிவலோகநாதன் தொடர்பான மரபணு பரிசோதனையின் முடிவு இன்னும் வெளியாகாமை குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் குற்றச்செயல்கள் தொடர்பில் மரபணு பரிசோதனைகயை “ஜெனடெக் மொலிகியூலர் டைக்னோஸிஸ்’ என்ற தனியார் நிறுவனமே மேற்கொண்டு வருகிறது.

இந்த நிறுவனம் இதுவரைக்கும் 12 ஆண்டுகளில் சுமார் 4ஆயிரம் குற்றச்செயல்கள் தொடர்பில் டிஎன்ஏ என்ற மரபணு பரிசோதனை மேற்கொண்டு முடிவுகளை அறிவித்துள்ளது.

எனினும் வித்யாவின் கொலையில் பலர் சம்பந்தப்பட்டிருப்பதால் இன்னும் இறுதி முடிவுக்கு வரமுடியவில்லை என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

சேயா சிறுமி பாலியல் வன்புணர்வு தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 17வயது மாணவனும் 33 வயது குடும்பஸ்தரின் விந்துகள் எடுக்கப்பட்டு அவை சேயாவின் உடலில் இருந்த விந்துகளுடன் ஒத்துப்போகிறா? என்று பரிசோதனை செய்ததில் அந்த இரண்டும் சேயாவின் உடலில் இருந்து விந்துக்களும் ஒத்துப்போகவில்லை.

எனவே அவர்கள் இருவரும் இந்த சம்பவத்தில் ஈடுபடவில்லை என்று முடிவெடுக்கப்பட்டது.

எனினும் வித்யாவின் பாலியல் வன்புணர்வு சம்பவத்தில் பலர் தொடர்புப்பட்டமையால் பலரின் விந்துக்கள் வித்யாவின் உடலில் கலந்திருந்தன.

எனவே அவற்றை தனித்தனியே பிரித்து பரிசோதனை செய்வதில் சிரமங்கள் உள்ளன.

இந்தநிலையில் இன்னும் பரிசோதனைகள் தொடர்வதாக நிறுவனத்தின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ருவன் இளையப்பெரும தெரிவித்துள்ளார்.
http://goo.g l/55MKxl-
Previous Post Next Post