Top News

நீண்ட பெயரால் பெண்ணுக்கு ஏற்பட்ட தொல்லை...



அமெரிக்காவில் ஹாவாய் தீவை சேர்ந்த ஜெனிஸ் என்ற பெண்ணுக்கு தன்னுடைய நீண்ட எழுத்து பெயரால் சிரமத்துக்கு ஆளாகி இருக்கிறார்.

அவர் பெயருடன் மறைந்த கணவரின் பெயரையும் இணைத்ததால் கூடுதலாக 35 எழுத்துகள் வருகிறது. எனவே மாநில நிர்வாகம் அடையாள அட்டையில் 2 வரிசையை ஒதுக்கி கொடுத்தார்கள். ஆனால் டிரைவிங் லைசென்சில் 34 எழுத்துகளே அடங்கியதால் கடைசி எழுத்து இடம்பெறாமல் போய் விட்டது.

இதன் விளைவாக அவர் போக்குவரத்து போலீஸ்காரரிடம் சிக்கி கொண்டு தவிக்க நேர்ந்தது. மனம் நோகும்படி போலீஸ்காரர் நடந்து கொண்டதாக அவர் புகார் கூறினார். அது தொலைக்காட்சியில் வெளியாகி சர்ச்சையை உருவாக்கியது. இதனை அடுத்து போக்குவரத்து துறையினர் வரும் டிசம்பர் மாதம் முதல் 40 எழுத்துகள் இடம்பெறும் வகையில் பெயர் விவரம் பொறிக்க இடவசதி செய்யப்படும் என அறிவித்து இருக்கிறார்கள்.......

Asar mohammed - www.fastlanka.lk
Previous Post Next Post