Top News

(யூஸ்) கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியமும் அதன் இளைஞர் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்த கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் 2.0 சுற்று அடிப்படையில் பிஸ்மி அணி வெற்றி(படங்கள்)

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு சமூகப் பணிகளை செய்துவரும் காத்தான்குடி (யூஸ்) கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியமும் அதன் இளைஞர் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்த கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி இன்று  22-02-2015 ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி கடற்கரையிலுள்ள வளவொன்றில் இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா ஹிறா பவுன்டேஷன் மற்றும் அல் மனார் நிறுவனத்தின் அனுசரனையில் கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தின் தலைவர் எம்.ஏ.எம்.சஹீத் தலைமையில் இடம்பெற்ற இக் கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் 6 அணிகள் பங்குபற்றின.

இதில் 2.0 சுற்று அடிப்படையில் ஒஸ்மான் அணியை பிஸ்மி அணி வெற்றி கொண்டது.

இக் கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் முதலாவது இடத்தைப் பெற்ற பிஸ்மி அணிக்கும் இரண்டாவது இடத்தைப் பெற்ற ஒஸ்மான் அணிக்குமான வெற்றிக் கிண்ணத்தை அதன் அணித் தலைவர்களிடம் காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல்.நஸீர்தீன் மற்றும் கிராம உத்தியோகத்தர் எம்.றவூப் ஆகியோர் வழங்கி வைத்தனர்.

இப் போட்டி நிகழ்வில் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.பி.வெதகெதர இ காத்தான்குடி குபா பள்ளிவாயல் தலைவர் கே.எல்.எம். மன்சூர்இ பிஸ்மி அணியின் தலைவர் அஸ்பாக்இ ஒஸ்மான் அணியின் தலைவர் சிப்கான் கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தின் பதில் தலைவர் எம்.எச்.எம்.அபீப் அதன் செயலாளர் எம்.ஐ.எம்.சிஹாப்இஅதன் அமைப்பாளர் ஏ.எஸ்.ஏ.ஜௌஸகி  உட்பட கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.






Previous Post Next Post