வைத்தியத்துறையில் இருந்தவாறே சட்டத்துறையில் தேர்ச்சி பெற்ற வை.எல்.யூசூப்

கடந்த 1998 ஆம் ஆண்டு முதல்  கொழும்பு தேசிய வைத்தியசாலை, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை போன்றவற்றில் கடமையாற்றி தற்போது கொழும்பு லேடி றிஜ்வே வைத்தியசாலையில் சிரேஸ்ட வைத்திய அதிகாரியாக கடமை புரிந்து கொண்டிருக்கும் வைத்தியர் வை.எல்.யூசூப், இலங்கை திறந்த பல்கலைக்கழக சட்டத்துறை கல்வி இறுதி ஆண்டு பரிட்சையில் 4 படங்களிலும்  B சித்தி எனும் சிறந்த பெறுபேற்றைப் பெற்றுள்ளார்.
இலங்கை தமிழ் பேசும் மக்களில் மேலைத்தேய வைத்தியர் ஒருவர் சட்டத்துறை பட்டதாரியாகவும் ஆகியிருப்பது இதுவே முதல் தடவை.   இவர் முகாமைத்துவ துறையிலும் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் கல்முனை ஸாகிரா கல்லூரியில் உயர் தரத்தை முடித்து கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டம் பெற்றவர்.


 -எம்.வை.அமீர் -
Previous Post Next Post