பொத்துவில் பிரேதேச சபையின் தவிசாளராக மீண்டும் அப்துல் வாசித்

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பொத்துவில் பிரதேச சபையில் அதிகப்படியான ஆசனங்களைப்பெற்று ஐக்கிய தேசிய கட்சி முன்னிலையில் இருக்கின்றது.

இருப்பினும் மற்றுமொரு கட்சியுடன் இணைந்தே ஆட்சியமைக்க வேண்டும், பொத்துவிலைப் பொறுத்த வரையில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியானது ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கான சாத்தியப்பாடுகள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.

 இந்த சந்தர்ப்பத்தில்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கான சாத்தியங்கள் நிலவுகின்றது அதற்கான உயர்மட்ட பேச்சுவார்த்தைகளும் நடைபெறுகிறது.

இது சாத்தியமானால் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளராக மீண்டும் அப்துல் வாசித் நியமிக்கப்படுவதுடன் அவருக்கு போட்டியாக உள்ள வெற்றி வேட்பாளர் அப்துல் ரஹீமுக்கு தலைமையினால்  மாகாண சபை வாக்குறுதி வழங்கப்பட இருப்பதாகவும் அறிய  முடிகின்றது.

எது எவ்வாறு இருப்பினும் ஐக்கிய தேசிய கட்சியானது தமிழ் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்க போகுமானால் அது முஸ்லிம் உறுப்பினர்களுக்குள்  இருக்கும் பிரிவினையை மேலும் அதிகரிக்கும் என்பது உண்மை.

இந்த சந்தர்ப்பத்தில் எமது பொத்துவிலின் நலனுக்காக அனைத்து கட்சியினரும் பொதுவான ஒரு தலைமையின் கீழ் ஒற்றுமைப்பட வேண்டும்,தவிசாளர் தொடர்பாக உள்ளூர் அரசியல்வாதிகள் ஓர் முடிவு எடுத்தால் மாத்திரமே எம்மை நாம் ஆழ முடியும் மாறாக பதவி ஆசைக்காக எமதூர் தொடர்பான இறுதி முடிவை எடுக்க வெளியூர் ஒருவரை நாடினால் அது நமது ஊருக்கு பாதகமாகவே அமையும்.

கட்சிகளை முன்னிலைப்படுத்தாமல் ஊரின் நலனை கருத்திற்கொண்டு எல்லோரும் ஒன்றிணைந்து ஒரு முடிவை எடுப்போமானால் நிச்சயமாக எமதூரின் தேவைகளையும் அடிப்படை பிரச்சினைகளையும் நாமே தீர்த்துக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் அமையும் என்பதில் ஐயமில்லை.
-கபூர் நிப்றாஸ்-
Previous Post Next Post