Top News

மீலாத் விழா ஆங்கில பேச்சுப் போட்டியில் கல்முனை பாலிகா மாணவி ஷைரின் முதலிடம்

தேசிய மீலாத் விழாவை முன்னிட்டு கல்வி அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய, கலாசார திணைக்களம் என்பன இணைந்து நடத்திய ஆங்கில மொழி மூல பேச்சுப் போட்டியில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (பாலிகா) மாணவி பாத்திமா ஷைரின் மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்று, தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.

ஏறாவூர் அலிகார் மகா வித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற மீலாத் பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமத், இதற்கான சான்றிதழை வழங்கி, தங்கப் பதக்கத்தையும் சூட்டி கௌரவித்தார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் 167 புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ள இம்மாணவி, பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றி, மாவட்ட, மாகாண, தேசிய மட்டங்களில் பரிசுகளை பெற்றுள்ளதுடன் கடந்த வருட மீலாத் விழா தேசிய மட்ட ஆங்கில மொழி மூல பேச்சுப் போட்டியில் இரண்டாமிடம் பெற்று கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு பெருமை ஈட்டிக் கொடுத்துள்ளார்.  

இவர் கல்முனை கடற்கரைப்பள்ளி வீதியைச் சேர்ந்த இனாம் ஷக்காப் மௌலானா- மஜ்மலா தம்பதியரின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post