Top News

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் 69வது மாநில மாநாட்டில் சிறப்புப் பேச்சாளராகவும் பிரதம அதிதியாகவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் 69-வது நிறுவன தினமான நேற்று  (10) இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் 69வது மாநில மாநாட்டில் சிறப்புப் பேச்சாளராகவும் பிரதம அதிதியாகவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டு சிறப்புரை ஒன்றை ஆற்றினார்.
விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களை சிறப்புப் பேச்சாளராக பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அழைப்பு விடுத்திருந்தார்.
-ஷபீக் ஹுஸைன்-


Previous Post Next Post