ஆனந்த தேரருக்கு பதிலளிக்கும் தேவை முஸ்லிம் சமூகத்துக்கில்லை-விளக்குகின்றார் அட்டாளைச்சேனை முனாஸ்

யார் இந்த ஆனந்த தேரர்...? முஸ்லிம் விரோத போக்குடைய பல தேரைகள் மழைக்குக் கத்தும் மோக்கைகள் போன்று கத்திக்கொண்டே இருப்பார்கள்.
இப்படியான இனவாதப் போக்குடைய தேரர்களுகெல்லாம் பதில் கொடுத்து அவர்களை மீண்டும் ஒரு ஞானசார தேரரை போல விசப்பாம்பினை உருவாக்கி விடுவோமோ என்னும் அச்சம் எம்முள் எழுகிறது;என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும், அக்கரைப்பற்றும் மற்றும் கல்முனை சாரணிய உதவி ஆனையாளர்  எஸ்.எல் முனாஸ் கருத்து தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

குரைக்கும் நாய்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக விரட்டியடிக்க முற்பட்டால் நாம் நினைக்கும் இடத்துக்குச் சென்றடைய முடியாது.

எனவே குரைப்பது குரைக்க நாம் நினைக்கும் இடத்துக்கு பயனித்துக்கொண்டிருக்க வேண்டியதுதான் நமது வேலை.

இந்த ஆனந்த என்னும் தேரரை ஒரு பெரிய தொலைக்காட்சி மூலம் பெரிய விளம்பரத்துடன் அறிமுகம் செய்து ஒரு முஸ்லிம் கட்சித் தலைவருடன் விவாதம் நடாத்தப்போகிறேன். விவாதம் நடாத்தியிருக்கிறேன் என்று இன்னும் இருக்கும் பலரையும் வீதியில் இறங்கி அழைக்கும் கேவலமான படலத்தை ஆரம்பிக்கும் சந்தர்ப்பமாக இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி அமைந்து விடப்போகிறது.

ஒரு ஆனந்த தேரர் அப்படிக் கூறியிருந்தால் ஆட்சியின் அங்கமாக இருக்கும் கட்சி என்று சொல்லும் நாம் ஆட்சியாளர்களிடம் பேசவேண்டும். சில்லறைத்தனமாகப் பேசும் ஆனந்த தேரர் போன்றோர் யார்..? ஏன் இவர்களுக்கு பதிலளிக்க வேண்டும். இவர்களுக்குப் பதிலளிக்க வேண்டிய தேவை என்ன..? இதனால் நாமடையும் இலாபம்தான் என்ன..?

இதனால் பிரபல்யம் அடைய நினைக்கும் அந்த தேரை நான் முஸ்லிம் தலைவருடனே மோதிவிட்டேன் என்று தனது பிரதேசங்களில் இருக்கும் நம் மக்களை சீண்டிப்பார்க்க முற்படுவார்கள்.

எனவே இப்படியான சில்லறைகளின் கூற்றுக்கள் ஒவ்வொன்றுக்கும் பதிலளிக்க முற்பட்டால் நமது பின்னுள்ள அப்பிரதேங்களில் வசிக்கும் நம்மக்களுக்கு அது வேறேதும் பிரச்சனைகளை உருவாக்கி விடும்.

தேரருடன் மோதுகிறார் அமைச்சர் என்று தம்பட்டமடிக்கும் சிலர் நன்றாக ஒரு விடையத்தை புரிந்து கொள்ள வேண்டும் இது கெட்டித்தனமல்ல கேவலம்.
வீதியால் பலர் பல விடையங்களைப் பேசிக்கொண்டு போகலாம் அவர்களை அழைத்து விவாதம் நடத்த வேண்டிய தேவை என்ன இருக்கிறது.

தங்களின் நியாயமான கருத்துக்களை பாராளுமன்றில் தெரிவிக்க வேண்டிய முழு அதிகாரம் தம்மிடம் இருக்கும்போது வீதியால் அங்கும் இங்கும் கத்தித் திரியும் இந்த தேரரின் நச்சுக்கருத்துக்கு பதிலளிக்க விவாதமேடை அமைப்பது நியாயமா..?

இதில் அமைச்சர் வென்று விட்டால் மட்டும் ஓகே அமைச்சர் வென்று விட்டார் என்று தேரர் சங்கம் குடியுரிமைச் சான்றிதளா வழங்கப்போகிறார்கள். ஏன் இந்த நிலமை...

நமது சமூகத்தின் குரலாக பாராளுமன்றில் பேசுங்கள் மாறாக சில்லறைத்தனமான தேரர்களிடம் பேசி இலங்கையில் மீண்டும் ஒரு பொதுபல சேனாவை உருவாக்க வளிசமைக்காதீர்கள்.

மறைந்த தலைவர் அன்று நடாத்திய விவாதம் என்ன அது ஏன் நடந்தது என்பதனை நண்றாக ஆராய்ந்து கொள்ளுங்கள். மாறாக இந்த ஆனந்த தேரரை நம்மில் எத்தனை பேர் கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஆனால் இன்று அமைச்சரின் விவாதம் அறிவிக்கப்பட்டதும் மூலை முடுக்குகள் மாத்திரமன்றி உலகமே அறிந்துள்ளது முஸ்லிம் தலைவர் ஒருவருடன் பெளத்த மத குரு விவாதமாம் என்ன என்ற கேள்வியுடன் எப்போது என்று பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

எனவே இன்று ஊடகங்களால் சமூகத்துக்கு பயனுள்ள ஏதும் நடக்க வேண்டும் என்றால் இப்படியான வற்றை ஊதி பெருப்பித்து சமூகத்தை மோதவிடாமல் அறியாதவிடையங்களை அறிந்து கொள்ள நல்ல கருத்துக்கள் வழங்குங்கள். வாங்கும் பணத்துக்கு பணிபுரியும் சிலர் தன்மானம் இழந்து செயற்படுவது வேதனையளிக்கிறது.என அவர் கருத்து தெரித்தார்.

நல்லதே செய்வோம், நல்லதே சிந்திப்போம், நல்லவற்றையே பேசுவோம், நல்லவற்றையே எழுதுவோம், நம் செயல் நமக்காகவும், நம்மக்களுக்காகவும் நன்மையை மட்டும் பெறவைக்கட்டும் எனப் பிரார்த்தித்து விடைபெறுகிறேன்.

 -சப்னி-
Previous Post Next Post