11 வருடங்களுக்கு பின்னர்- காத்தான்குடி பஸ் டிப்போவுக்கு- போக்குவரத்து அமைச்சர் நிமால் திடீர் விஜயம்.புதிய பஸ் சேவையையும் ஆரம்பித்துவைத்தார்

11 வருடங்களுக்கு பிறகு முதற்தடவையாக இலங்கை போக்குவரத்து சபையின் காத்தான்குடி பஸ் டிப்போவுக்கு போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா நேற்று 11 ஞாயிற்றுக்கிழமை மாலை திடீர் விஜயம் செய்தார்.
அங்கு விஜயம் செய்த போக்குவரத்து அமைச்சர் காத்தான்குடி பஸ் டிப்போவின் தற்போதய நிலைமைகளையும், குறைபாடுகளையும் பற்றி காத்தான்குடி பஸ் டிப்போ முகாமையாளர் எம்.ஐ.வீ.முனிரிடம் கேட்டறிந்து கொண்டார்.

இவ் விஜயத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரிமால் சிறிவர்த்தன,போக்குவரத்து அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர,இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்குப் பிராந்திய முகாமையாளர் ஏ.எல்.சித்தீக், கிழக்குப் பிராந்திய செயலாற்று முகாமையாளர் எஸ்.கனகசுந்தரம், கிழக்குப் பிராந்திய பொறியியல் முகாமையாளர் றூமி உட்பட இலங்கை போக்குவரத்து சபையின் உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா பூநொச்சிமுனை டச்பார் ஊடாக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு செல்வதற்கான புதிய பஸ் சேவையையும் ஆரம்பித்து வைத்தார்.

போக்குவரத்து அமைச்சரின் விஜயத்தை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் றவூப் ஏ.மஜீட்,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட்,காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சல்மா அமீர் ஹம்ஸா,புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
-பழுலுல்லாஹ் பர்ஹான்-
Previous Post Next Post