Top News

ஏன் இந்த மௌனம் ???(பொத்துவில்)

நாம் இன்று எமது மண்ணின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டத்தில் இருந்துகொண்டிருக்கின்றோம். நல்லது கெட்டது நடப்பது,நடக்கப் போவது பற்றி சிந்தித்து தீர்க்கமான முடிவினை எடுத்து நமது ஊரின் தலைவிதியை நாமே தீர்மானிக்கவேண்டிய நேரத்தில் இருந்துகொண்டிருக்கின்றோம். ‘‘கரணம் தப்பினால் மரணம்’’என்ற நிலை இன்று எமக்கு இருக்கின்றது. வரலாற்றில் என்றும் கிடைக்காத சந்தர்ப்பம் இன்று தேசியகாங்கிரஸின் தலமையால் கிடைத்திருக்கின்றது,அதை வாய்க்கெட்டாமல் தட்டிவிடாதீர்கள்.
எமது மண்ணில் பிறந்த மர்ஹும் வை.எம்.முஸ்தபா,சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஐ.ஆதலெப்பை,மர்ஹும் ஆஸாத் மௌலானா,காசீம் மௌலவி,அப்துல் மஜீத்(ssp),மர்ஹும் எம்.பீ.ஏ.அஸீஸ் போன்றோர்கள் கடந்த கால பொதுத் தேர்தலில் களமிறங்கியபோதிலும் அதிலும் காசீம் மௌலவி அவர்கள் முஸ்லீம் காங்கிரஸின் அதிகாரம் பொத்துவில் மண்ணில் உச்சகட்டத்தில் இருந்தகாலத்தில் இறங்கினார். அதேபோல் முன்னாள் பொலீஸ் அத்தியட்சகர் அவர்கள் ஐக்கியதேசியகட்சியின் அதிகாரம் உச்சகட்டத்திலிருந்த காலகட்டத்தில் மட்டுமல்லாமல் இவரது பதவிவழியாகவும் அவருக்கிருந்தஅதிகபட்ச செல்வாக்குகளுக்குமிடையில் பொதுத் தேர்தலில் குதித்தார். இச்சந்தர்ப்பாங்களில் எமக்குகிடைத்த பலன் தான் என்ன ???

இவ்வரலாற்று செய்திகள் எமக்கு எதனை உணர்த்துகின்றது ???
சிந்தியுங்கள் என் உடன் பிறப்புக்களே! என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் திகாமடுல்ல வேட்பாளர்களை ஆதரித்து பொத்துவில் ஹிதாயாபுர பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் திகாமடுல்ல மாவட்ட மூன்றாம் இலக்க வேட்பாளர்  ஏ.பதுர்கான் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்,

எமதுபக்கத்துக் கிராமங்களின் பூரண ஒத்துழைப்பின்றி இம்மண்ணில் இருந்து ஒருவர் தேர்தலில் களமிறங்கி வெற்றியடைய முடியாது. ஆனால் தற்போது நமக்கு ஓர் அரிய வாயப்பு கிடைத்துள்ளது. முன்னாள் அமைச்சர் அதாவுல்லா,அக்கறைப்பற்று மக்களும்,முன்னாள் கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை,அட்டாளைச்சேனை மக்கள் மற்றும் இறக்காமம் போன்ற அயல் கிராமங்கள் 27000 இற்கும் மேற்பட்ட வாக்குகளைத் தருவதற்கு உறுதியளித்துள்ளார்கள். இது எமதுமக்களை முஸ்லீம் காங்கிரஸினர் காலாகாலமாக ஏமாற்றுவது போன்றல்ல கடந்தகால முன்னுதாரணங்கள்  பலசான்றுபகிரும். அதாவது,மாகாணசபைத் தேர்தலில் அட்டாளைச்சேனை,நிந்தவூர்,மருதமுனை,சம்மாந்துறை போன்ற பிரதேச பிரதிநிதிகளுக்கு தேசியகாங்கிரஸின் ஆதரவாளர்கள் வழங்கிய மக்கள் ஆணை நாம் மறந்துவிடமுடியாது. அதேபோல் பொதுத் தேர்தலில் கல்முனை,சம்மாந்துறை,சாய்ந்தமருது மக்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது,ஆனால் அப்பிரதேச மக்கள் உரியமுறையில் வாக்களிக்காமல் தலையில் மண்ணை அள்ளிவாரிப் போட்டு பாராளுமன்ற பிரதிநிதியை இழந்தார்கள். இவை எமக்குமுன்; வரலாற்றுதவறுகள்.

அதே சந்தர்ப்பம் எமக்கு தேசியகாங்கிரஸ் ஊடாக கிடைத்துள்ளது,எமக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்துவதன் மூலம் எமதூருக்கான அரசியல் அதிகாரம் உள்ள பிரதிநிதியொருவரை பெற்றுக் கொள்ளலாம். ஏமாற்றுக்காரர்களின் வாக்குறுதிகளை நம்பி எமதுவாக்குகளை அளித்து எமக்கான பிரதிநிதியை இழந்துவிடாதீர்கள். இவ்வாறான ஒரு தடையை உடைத்தெறிந்து எம்மண்ணுக்கு வரலாற்றுநிகழ்வை உண்டுபண்ணுங்கள்.

சங்கைக்குரிய உலமாக்களே,கல்விமான்களே,பள்ளிவாயல் நிருவாகத் தலைவர்களே,செல்வந்தர்களே,விவசாயிகளே, இளைஞர்களே எல்லோரும் ஒன்று கூடி பொத்துவிலின் தலைவிதி தொடர்பான யதார்த்தபூர்வமான நடைமுறைச்சாத்தியமுள்ள தீர்மானமொன்றை எடுங்கள்  என்றும் தனதுஉரையில் கூறினார்.

இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சரும்,தேசியகாங்கிரஸின் தேசியத்  தலைவருமான அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.அதாவுல்லா அவர்களும்,கிழக்கு மாகாண உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெவ்வை அவர்களும் மற்றும் தேசியகாங்கிரஸின் முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
-எம்.எஸ்.சம்சுல் ஹுதா,பொத்துவில்-

Previous Post Next Post