Top News

பொத்துவில் அல் இர்பான் வித்தியாலயத்தில் நடைபெற்ற உரிமை மீற‌லும் நிதி மோசடியும்-3

பொத்துவில் அல் இர்பான் வித்தியாலயத்தில் நடைபெற்ற உரிமை மீற‌லும் நிதி
மோசடியும் எனும் தலைப்பில் உரிய மாணவியினால் ஒப்பமிடப்பட்டு சட்ட
நடவடிக்கைக்கும் எமக்கும் அனுப்பப்பட்டது உண்மையே.
இது இவ்வாறு இருக்க உண்மை நிலை என்ன வென்று அறியாத சில சகோதரர்களும் எம்மை தவறாக நினைக்கலாம் ஆனால் சத்தியத்தோடு ஊடக தர்மத்தை காப்பாத்த நினைக்கும் நான் பொய்களை கண்டு அஞ்ச போவதில்லை.

அத்தோடு குறித்த மாணவி பரீட்சை தனிப்பட்ட‌ ரீதியில் எழுதுகின்றார் என்பது உண்மையே. பாடசாலையில் கல்வி கற்ற அந்த‌ மாணவி ஏன் தனிப்பட பரீட்சை எழுதுகின்றார்? அம் மாணவி தனிப்பட எழுதுவதற்கான காரனம் என்ன? அம்மாணவி தொடர்ச்சியாக பாடசாலைக்கு செல்ல வில்லையா? பாடசாலையில் விண்ணப்பித்தும் ஏன் தனிப்பட எழுதுகின்றார் இவ்வாறன கேள்வியை அதிபரின் மறுப்பறிக்கைக்கு நாம் கேட்க தவறியது ஏன் இனியும் நாம் குனிந்த சமூகமாக மாறவேண்டுமா? அம்மாணவி குறிப்பிட்ட சுட்டென் பாடசாலை மாணவருக்கு உரியதே அவரின் பெயரும் அவ்வாறே அறிய முடிகின்றது .

அத்துடன் அம் மாணவி பரீட்சை எழுதுவது பொத்துவில் மத்திய கல்லூரியில்
என்பது நிதர்சனமான உண்மை அங்கு கடமை வகிக்கும் பிரதான பரீட்சை
மேற்பார்வையாளராக இருப்பது அல் இர்பான் பாடசாலையின் ஆசிரியர் திரு றஹீம் என்பவர் ஆகும் பரீட்சை எழுதும் மாணவர்களின் அனுமதி அட்டை எக்காரணம் கொண்டும் வெளிநபர்களுக்கு கொடுப்பது தண்டனைக்குரிய குற்றம். இது இவ்வாறு இருக்க குறித்த மாணவியின் அனுமதி அட்டை எவ்வாறு வெளிநபர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாணவியின் அனுமதி அட்டை முறைகேடான விதத்தில் கைமாறப்பட்டதினை நோக்கும் குறித்த ஆசிரியரும் இதற்கு உடந்தையாக இருக்கின்றார என என்னத்தோன்றுகின்றது.

மேலும் அம்மாணவி குறிப்பிட்ட இரு விடயங்களும் உண்மை என்பது அல்லாஹ் மீது
பயந்தவனாக தெரிவித்து கொள்கின்றேன்.
-மக்ஸூத் முஹம்மட் றம்சான்-
Previous Post Next Post