புதிய போக்குவரத்து விதிமுறைகளால் மக்கள் அவதி.

இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வீதி விதிமுறைகளினால் தலைநகரான கொழும்பில் பணிபுரியும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் , முச்சக்கர வண்டி மற்றும் பஸ் வண்டி என்பனவற்றுக்கு மட்டும் வீதியின் ஒரு பகுதியை பயன்படுத்துமாறும் ஏனைய சொகுசு வாகனங்களுக்கு வீதியின் மற்றைய பகுதியை பயன்படுத்துமாறும் அண்மையில் புதிய போக்குவரத்து விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டதையடுத்து தலைநகரில் பணிபுரியும் சாதாரண தொழிலாளர்கள் தங்களது தொழில் நிமித்தம் பயணம் செய்வது மிகவும் தாமதம் ஆவதாகவும் அதனால் தமது அலுவலகங்களில் பல்வேறுபட்ட பிரச்சனைகளை சந்திப்பதாகவும் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

அனைத்து மக்களும் ஏழைகள் வசதியானோர் என பாகுபாடின்றி பயன் அடைய கூடிய வகையில் குறித்த சட்டத்தில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்,
Previous Post Next Post