இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் பிரேசில் பயணம்

பிரேசில் நாட்டில் 06.05.2019 முதல் 10.05.2019 வரை நடைபெற்றுக்கொண்டு இருக்கும் உலக தெங்கு உற்பத்தி கண்காட்சிக்கு இலங்கை சார்பில் கலந்துக் கொள்ள உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் பிரேசிலுக்கு சென்றுள்ளார்.
உலகளாவிய ரீதியில் தெங்கு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தெங்கு உற்பத்தியாளர்கள் தங்கள் நாட்டின் தெங்கு உற்பத்திகளை இங்கு காட்சிபடுத்தவுள்ளனர். இலங்கையில் தெங்கு ஆராச்சி சபையின் மூலம் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் தெங்கு உற்பத்தி பொருட்களும் இங்கு காட்சிபடுத்தபட்டுள்ளன.

உலகளாவிய ரீதியில் உற்பத்தி செய்யப்படும் தெங்கு உற்பத்திகளுக்கு உரிய சந்தை வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் இந்த கண்காட்சி நடாத்தப்படுகின்றது. இந்த கண்காட்சியில் உலகளாவிய தெங்கு ஏற்றுமதியாளர்களும் இறக்குமதியாளர்களும் கலந்தக் கொள்ள உள்ளனர். இந்த கண்காட்சி ஒவ்வொறு ஆண்டும் நடாத்தபட்டு வருகின்றது.

இலங்கையில் தெங்கு உற்பத்திகளுக்கு பொறுப்பானவராக இருக்கும் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் பிரேசிலில் பல தெங்கு ஏற்றுமதியாளர்களையும் இறக்குமதியாளர்களையும் சந்தித்தார்


இலங்கையில் உற்பத்தி செய்யும் தெங்கு உற்பத்திகளுக்கு உலக சந்தையில் நல்ல சந்தை வாய்ப்பை மேற்க் கொள்ளும் நோக்கில் இந்த முயற்சிகளை பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சும் பொருப்பான இராஜாங்க அமைச்சரும் நடவடிக்கைகளை மேற்;கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் பெருந்தோட்ட துறையில் தெங்கு உற்பத்தி முன்னிலை வகித்து வருகின்றது. இதனை அபிவிருத்தி செய்ய பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. தெங்கு உற்பத்தியாளர்களுக்கு பல மானியங்களும் வழங்கபட்டு வருகின்றன. இதன் ஊடாக இவர்களின் உற்பத்திகளுக்கு உலக சந்தையில் நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இந்த செயற்திட்டத்தின் ஊடாக தெங்கு உற்பத்தியாளர்கள் நன்மை அடைவார்கள் என எதிர்பார்க்கபடுகின்றது.
-பா.திருஞானம்-

Previous Post Next Post