அரசியலில் பதவிகள், பணத்திற்கு ஆசைப்பட்டிருந்தால் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் தலைவர் அஸ்ரபுடன் கொள்கைக்காக செயலபட்டிருக்கமாட்டோம் - முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெவ்வை

அன்று ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்த போது தான் பெருந் தலைவர் மர்ஷ{ம் எம்.எச்.எம்.அஷ;ரப் அவர்கள் முஸ்லிம் காங்கிரஸை ஸ்தாபித்தார்கள். தலைவருடைய கொள்கைக்காகவே இறுதி வரை நாம் செயல்பட்டோம். நாங்கள் பணத்திற்கும் பதவிக்கும் ஆசைப்பட்டிருந்தால் அன்றே ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பயணித்திருப்போம். ஏனெனில் அன்று எமது பிராந்தியங்களில் ஆட்சி அதிகாரங்களுடன் இருந்தவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியினரே என தேசிய காங்கிரஸின் முன்னாள் பொத்துவில் பிரதேச அமைப்பாளரும், முன்னாள் பொத்துவில் பிரதேச சபையின் பிரதித் தவிசாளருமான ஏ.பதுர்கான் ஆசிரியர் தலமையில் பொத்துவில் பிரதேசத்தில் இடம்பெற்ற சமகால அரசியல் தொடர்பான கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரும், கிழக்கு மாகாண முன்பள்ளி பாலர் பாடசாலைகள் பணியகத்தின் தவிசாளருமான எம்.எஸ்.உதுமாலெவ்வை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

நாங்கள் ஒரு போதும் சந்தர்ப்பவாத அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டோம். எங்களைப் பார்த்து 30 மில்லியன் பணத்திற்கு சோரம் போகின்றார் என்ற போலிப் பிரச்சாரங்களை தேசியக் காங்கிரஸினுடைய தலைவர் கூறுவார் என்று நான்  கனவிலும் நினைக்கவில்லை. அந்த வார்த்தைகளை நான் உயிராக விசுவாசம் வைத்திருந்த தலைவர் கூறிய போது நான் ஆச்சிரியமும், அதிர்ச்சியும் அடைந்தேன். நாம் கட்சி மீதும், தலைவர் மீதும், நமது மக்கள் மீதும்  வைத்திருந்த அசைக்க முடியாத விசுவாசத்தில் கை வைத்த போது எதிர்பாராத விதமாக தேசியக் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டது. நாங்கள் எப்போதும் அடிமட்ட மக்களுடன் தொடர்பாகவும், நட்பாகவும் செயற்படும் போது சாதாரண மக்கள், கல்வியலாளர்கள், பிரமுகர்கள் எல்லோரும் தலைவரிடம் சில விடயங்களைப் பற்றி கூறுமாறு சொல்லுவார்கள். கள நிலமையினை அவர்கள் சொல்லும் போது அந்த செய்தியினை நான் தலைவரிடம் எத்தி வைப்பேன். அது எனது கடமையாகும். கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் பொத்துவில் பிரதேச சiயில் தேசிய காங்கிரஸ் சிறி லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கைச்சின்னத்தில் போட்டியிட்டது. பொத்துவில் பிதேச வேட்பாளர்கள், மத்திய குழு வட்டார குழுவின் தலைவர்கள் பங்கு பற்றிய விஷேட கூட்டம் இவ்விடத்திலேயே இடம்பெற்றது.
வேட்பாளர்களான ஜமாஹிம், அன்சார் ஆகியோர் அன்றையக் கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கையில் வேட்பாளர்களின் போஸ்டர்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுடைய புகைப்படத்தை மாத்திரம் இட்டு அச்சிடுவோம் என்றும் தேசிய காங்கிரஸினுடைய தலைவர் அதாவுல்லா அவர்களுடைய புகைப்படத்தை இட வேண்டாம் என்றும் தெரிவித்தனர். ஆனால் நமது கட்சியின் தலைவருடைய புகைப்படத்தையும் போட வேண்டும் என நானும் சட்டத்தரணி பஹீஜ் அவர்களும் கருத்துத் தெரிவித்தோம்.
அதற்கு அவர்கள் தலைவருடைய புகைப்படத்தை பொத்துவில் மக்கள் கண்டால் கைச் சின்னத்திற்கு வாக்களிக்கமாட்டார்கள். நமது வேட்பாளர்கள் தோல்வியடைவார்கள் என்றும் ஜனாதிபதியினுடைய புகைப்படத்தை மாத்திரம் இட்டு போஸ்டர்களை அச்சிடுவோம் எனவும், தேர்தலில் வெற்றியடைந்ததன் பின்னர் தலைவரை வாகனங்களில் ஏற்றி பெரிய ஊர்வலம் கொண்டு செல்வோம் எனவும் தெரிவித்தனர். அந்த இடத்தில் நான் பகிரங்கமாக சொன்னேன் நீங்கள் தலைவரின் புகைப்படத்தை போடாமல் போஸ்டர் அடிப்பதை விட நேரடியாக சிறி லங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டிருக்கலாம் என கண்டனத்தை தெரிவித்ததுடன், நான் தேசிய காங்கிரஸில் தேசிய அமைப்பாளராக பதவி வகித்த காலத்தில் நான்கு வேட்பாளர்கள் தேர்தலில் தலைவரின் புகைப்படத்தினை போஸ்டரில் போடாமல் தேர்தல் பிரச்சாரம் செய்தால் அதிகப்படியான வாக்குகளைப் பெறலாம் என தவறாக செயல்பட்டனர். இந்த நான்கு பேரும் தேர்தலில் படு தோல்வியடைந்துள்ளனர் என்பதை அன்று வெளிப்படையாகவே தெரிவித்தேன்.
பின்னர் நானும், சட்டத்தரணி பஹீஜ் அவர்களும் தலைவரை சந்தித்து நடந்த விடயங்களைத் தெரிவித்தோம். உடனடியாக தலைவர் கட்சியினுடைய பொத்துவில் பிரதேச முக்கியஸ்தர் ஒருவரை தொடர்பு கொண்ட போது  வேட்பாளர்களின் மனநிலையை சொன்னார்.

மேலும், வேட்பாளர்கள் தேசிய காங்கிரஸின் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருந்த போதும், கட்சியின் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லா அவர்கள் கலந்து கொள்வதற்கான எந்தவொரு பொதுக் கூட்டங்களையும் ஏற்பாடு செய்யவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் பொத்துவில் பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போது கட்சியினுடைய பொத்துவில் அமைப்பாளராகவிருந்த ஏ.பதுர்கான் ஆசிரியர் அவர்களின் ஏற்பாட்டிலே தலைவருடைய புகைப்படங்கள் இட்ட பதாதைகளை காட்சிப்படுத்தப்பட்டன.

இந்நிகழ்வு அனைத்திற்கும் சாட்சியாக இன்று கூட்டத்தில் கலந்து கொண்டவர்களும், பெரும்பான்மையான முக்கியஸ்தர்களும் சாட்சியாளர்களாக இருக்கின்றிர்கள். உண்மை நிகழ்வு இப்படி இருக்க கட்சியில் உள்ள சில வக்குபனம் சில் நாங்கள் திட்டமிட்டு தலைவரின் புகைப்படத்தினை வெளியிடவில்லை என உண்மைக்கு புறம்பான விடயங்களை சொல்ல தலைவரும் அவைகளை நம்பி எமது விசுவாசத்தின் மீது சேறு பூசியமை எமக்கு ஆச்சரியமாகவுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனைப் பிரதேசம் என்பது முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையாகும். அந்தப் பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரஸை தொடர்ச்சியாக எதிர்த்து அரசியல் செய்து கடந்த உள்ளூராட்சிமன்ற சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் வாக்குப் பலத்தில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தி முஸ்லிம் காங்கிரஸிற்கு 08 ஆசனங்களும், முஸ்லிம் காங்கிரஸிற்கு எதிராக 10 ஆசனங்களும் கிடைக்கக் கூடிய நிலமையை ஏற்படுத்தினோம். இருந்தும் அட்டாளைச்சேனை பிரதேச சபையினுடைய அதிகாரத்தினை தேசிய காங்கிரஸ் பெறுவதற்கு அரிய சந்தர்ப்பமிருந்தும் தலைவரின் கவனயீனத்தால் அட்டாளைச்சேனை பிரதேச சபையினுடைய அதிகாரத்தினை தேசிய காங்கிரஸ் இழக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. மக்கள் மத்தியில் பொதுக்கூட்டங்களில் முஸ்லிம் காங்கிரஸை படு மோசமாக விமர்சனம் செய்த தலைவர் கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் வாழ்க! ரவூப் ஹக்கீம் வாழ்க! என்று பத்திரிகையாளர்கள் மத்தியில் தெரிவித்தார்.

எனவே, திருட்டுத்தனமாக நாம் முஸ்லிம் காங்கிரசுக்கு ஆதரவு வழங்குவதை விட வெளிப்படையாகவே முஸ்லிம் காங்கிரசுக்கு ஆதரவு வழங்குவது என தீர்மானம் மேற்கொண்டு வோது வெளிப்படையான விடயமாகும். எனவே, கட்சியிலிருந்து வெளியேறிய நாங்கள் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள முஸ்லிம் கிராமங்களுக்கு சென்று மக்களின் கருத்துக்களை உள்வாங்கி ஒரு தீர்க்கமான முடிவினை எடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றோம். இந்த நடவடிக்கைகள் முடிவடைந்தவுடன் எல்லோரும் இணைந்து ஒரு தீர்மானத்திற்கு வரலாம் என எண்ணியே நாங்கள் எடுக்கும் தீர்மானத்தின் ஊடாக நமது சமூக நலன் மிக முக்கியமாக கவனத்தில் எடுக்கப்படும். அரசியல் அதிகாரம் என்பது இறைவனின் நாட்டப்படியே மனிதர்களுக்கு கிடைக்கின்றது. யாரிடம் இருந்து அரசியல் அதிகாரங்களை இல்லாமல் செய்ய வேண்டும் எனவும் இறைவனின்  தீர்ப்புப்படியே நடக்கிறது என்ற நம்பிக்கையுள்ளவர்கள் நாம். எனவே இறைவனின் நாட்டப்படி நடப்பவைகளை நாம் ஏற்றுக் கொள்வோம் எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சட்டத்தரணி எம்.பஹீஜ், தேசிய காங்கிரஸின் இறக்காமப் பிரதேச முன்னாள் அமைப்பாளர் எம்.எஸ்.பரீட் மற்றும் எம்.எஸ்.உதுமாலெவ்வையின் ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


-எம்.எஸ்.சம்சுல் ஹுதா-
Previous Post Next Post