பொலிஸ் திணைக்களத்தின் 150வது ஆண்டு நிறைவையொட்டி மாபெரும் நடமாடும் சேவை-பொத்துவிலில்

பொத்துவில் பொலிஸ் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொலிஸ் நடமாடும் சேவை இன்று காலை 9:30 மணிக்கு பொத்துவில் ஊறணிப்பகுதியில் இடம்பெற்றது.
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 150வது ஆண்டு நிறைவையொட்டி பொலிஸ் மா அதிபர் திரு-பூஜித ஜயசுந்தர அவர்களின் ஆலோசனை வழிகாட்டலுக்கமைவாக நாடளாவிய பொலிஸ் நிலையங்களினால் இன்றுதொடக்கம் இம்மாதம் முழுவதும் பொலிஸ் பிரஜைகள் நல்லுறவுச் செயற்றிட்ட மாதமாக பிரகடணப்படுத்தப்பட்டு அனுஷ்டிக்கப்பட்டுவருகின்றது.
இதன் ஆரம்ப நிகழ்வானது பொலிஸ் மா அதிபரின் தலைமையில் மாத்தறைப் பிரதேசத்தில் இடம்பெற்ற நிலையில் பொத்துவில் பொலிஸ் நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட பொலிஸ் நடமாடும் சேவையானது ஊறணி மீனவர் கட்டடத்தொகுதியில் இடம்பெற்றது.
நிலையப் பொறுப்பதிகாரி திரு-வசந்த குமார தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுக்கு பிரதேச செயலாளர் என்.எம். முஷர்ரத் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் அக்கரைப்பற்று பொத்துவில் பிரதி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் அறுகம்பை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி ஆகியோரும் பிரரசண்ணமாகியிருந்தனர்.

நடமாடும் சேவையில் பயணாளிகளுக்கு தென்னங் கன்றுகள் பகிர்ந்தளிக்கப்பட்டதுடன் மாணவர்களுக்கு புத்தகப் பொதிகளும் வழங்கிவைக்கப்பட்டன.
-மரியமின் புத்திரன்-
Previous Post Next Post