உலக சமாதான தினத்தையொட்டி தேசிய ரீதியில் முழு இலங்கையும் சுற்றி சைக்கிள் ஓட்டம்- பொத்துவில் சுல்பிகார்

இலங்கையில் சமாதான நல்லிணக்கத்தை மேம்படுத்தும் முகமாக முழு இலங்கையையும் 10நாட்களில் துவிச்சக்கர வண்டி மூலம் சுற்றி முடிப்பதற்கு கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேசத்தில் உள்ள கே.சுல்பிகார் எனும் வீரர் விளையாடடுத் துறை அமைசச்சின் அனுமதியினைப் பெற்று எதிர்வரும் 21.09.2016ம் திகதி கொழும்பில் இருந்து முதல் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளார்.
தென்கிழக்குப பல்கலைக்கழகத்தின் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் எம்.எல்.எம்.தாகீர் அவர்களின் பயிற்றுவிப்பில் இவர் தினமும் 140 கிலோமீற்றர் துரத்தை தொடர்ச்சியாக 07 மணி நேரத்தில் பயற்சியாக மேற்கொண்டு வந்துள்ளார். ஆரம்ப காலங்களில் பிரதேச மாவட்ட மாகாண, தேசிய ரீதிகளில் சைக்கிள் மற்றும் குறுந்தூர ஓட்டப் போட்டிகளிலும் பங்குபற்றியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.




தாய் நாட்டில் சமாதான நல்லிணக்கத்தை விளையாட்டினூடாக கட்டியெழுப்புதல் என்ற நோக்கில் இவரால் விளையாட்டுத் துறை அமைச்சில் விண்ணப்பித்தற்கு அமையே இவருக்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
இருந்த போதிலும் அரசு இவருக்கான அணுசரனையை வழங்குவதில் கால தாமதங்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளதாலும் எதிர்வரும் 21.09.2016ம் திகதி தனது பயணத்தை ஆரம்பிப்பதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதனாலும் இவருக்கான அனுசரணையை இலக்கத்தின் 0770855777 மூலம் வழங்கியுதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
Previous Post Next Post