பொதுமக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் பொறியியலாளர் சிப்லி பாறுக்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை - கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் மாங்கேணி தெற்கு 211G, கிராம சேவையாளர் பிரிவிலுள்ள காரமுனை கிராமத்திற்கு 2016.03.30ஆந்திகதியும், புனானை 211B, கிராம சேவையாளர் பிரிவிலுள்ள ஆலங்குளம் கிராமத்திற்கு 2016.05.05ஆந்திகதியும் மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் அவர்கள் விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.
இவ்விஜயத்தின்போது காரமுனை கிராமத்திற்கு செல்லும் வீதியில் முறையற்ற விதத்தில் நாளாந்தம் கொட்டப்படும் குப்பை கூழங்களை தேடி வரும் யானைகள் அவ்வீதியால் பயணிக்கும் பொதுமக்களுக்கு தீங்கிழைக்கும் இடங்களையும், அத்தோடு 2015.10.28ஆந்திகதி யானைகளின் தாக்குதழுக்கு இலக்காகி மரணமடைந்த மையன் பாவா ஹனீபா என்பவரை தாக்கிய இடத்தினையும் நேரில் சென்று பார்வையிட்டதோடு, ஆலங்குளம் கிராமத்தில் மக்கள் பயன்படுத்தா வன்னம் குண்றும் குழியுமாக காணப்படும் வீதியினையும் சமப்படுத்தி தருமாறும் பொறியியலாளர் சிப்லி பாறுக் அவர்களிடம் இரு கிராம மக்களும் கேட்டுக்கொண்டனர்.
மேலும், பொதுமக்கள் பயணிக்கும் வீதியருகில் நாளாந்தம் முறையற்ற விதத்தில் கொட்டப்படும் குப்பைகளை அவ்விடத்தில் கொட்டாது தடைசெய்து அவ்விடத்தினை சுத்தப்படுத்தி தருவதற்குரிய நடவடிக்கைகளையும், ஆலங்குளம் கிராமத்தில் குண்றும் குழியுமாக காணப்பட்ட வீதியினை சமப்படுத்தி மக்களின் பாவனைக்கு உகந்த வகையில் சரி படுத்தி தருவதற்குரிய ஏற்பாடுகளையும் மேற்கொள்வதாக பொதுமக்களுக்கு வீதிக்கொரு நாள் மக்கள் குறை கேட்கும் நிகழ்ச்சித்திட்டத்தில் பொறியியலாளர் சிப்லி பாறுக் வாக்குறுதியளித்திருந்தார்.

அதற்கமைவாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்புகொண்டு கோறளைப்பற்று மற்றும் கோறளைப்பற்று வடக்கு ஆகிய இரு பிரதேச சபைகளின் ஒத்துழைப்புடன்  காரமுனை கிராமத்திற்குச் செல்லும் வீதியருகில் நாளாந்தம் முறையற்ற விதத்தில் கொட்டப்படும் குப்பைகளை தடைசெய்து அவ்விடத்தினை சுத்தப்படுத்தியதோடு மற்றும் ஆலங்குளம் கிராமத்தில் குண்றும் குழியுமாக காணப்பட்ட வீதியினை சமப்படுத்தி மக்கள் பயன்படுத்தும் வன்னம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் அவர்கள் இரு கிராம மக்களுக்கும் அளித்த வாக்குறுதிக்கமைவாக  2016.05.31ஆந்திகதி (செவ்வாய்க்கிழமை) இன்று தீர்வினை பெற்றுக்கொடுத்தார்.
-M.T. ஹைதர் அலி-
Previous Post Next Post