'முத்து முத்து கருவாயா' தமிழ் சினிமாவை கலக்கும் ஈழத்து கவிஞரின் பாடல்.

விஜய் ஆண்டனியின் 'நான்' திரைப்படத்தில் 'தப்பெல்லாம் தப்பேயில்லை' என்ற பாடல் எழுதி தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமானவர் கவிஞர் அஸ்மின்.
இந்த படம் வெற்றி பெற்றதோடு பாடலும் மிகுந்த கவனம் பெற்றது.

அதன் பின்னர்  'அமரகாவியம்' திரைப்படத்தில் ஜிப்ரான் இசையில் பத்மலதா பாடிய 'தாகம் தீர கானல் நீரை காதலின்று காட்டுதே' என்ற பாடலை எழுதினார்.

திரை விமர்சகர்களால் அஸ்மின் பாடல் வரிகளை கவிதையாய் தெளித்திருக்கிறார்  என்று கோடிட்டு காட்டப்பட்ட அந்த பாடலுக்கு சிறந்த வெளிநாட்டு பாடலாசிரியருக்கான 'எடிசன்' விருது அவருக்கு கிடைத்தது.

இதனூடாக தமிழ் சினிமாவில் தான் எழுதிய இரண்டாவது பாடலுக்கு முதலாவது விருதினை பெற்றார் அஸ்மின்.

அதன் பின்னர் அஸ்மின் பாடல் எழுதி வெளிவரவுள்ள திரைப்படம்தான் 'சும்மாவே ஆடுவோம்'  ஸ்ரீரங்கா புரொடக்ஷன் சார்பில் டி.என்.ஏ.ஆனந்தன் தயாரிக்க 'காதல்' சுகுமார் இயக்கும் இப்படத்துக்கு ஸ்ரீ'காந்த் தேவா இசையமைத்துள்ளார்.

'முத்து முத்து கருவாயா -ஒரு
முத்தம் தர வருவாயா
கொத்து கொத்தா நான் பூத்து கெடக்குறன்

தொட்டு தொட்டு படிப்பாயா
நான் தொட்டுபுட்டா மொறப்பாயா
சொட்டு சொட்டா ஒன்ன நெனச்சி உருகிறன்.'

என ஆரம்பிக்கும் பாடலின் Making Video  அண்மையில் வெளியிடப்பட்டு மிகுந்த கவனம் பெற்று வருகிறது . 'அலுங்குறேன் குலுங்குறேன்' பாடலை பாடிய நமீதா பாபு மற்றும் ஹரிஹரசுதன் ஆகியோர் இந்தப் பாடலை பாடியுள்ளனர்.

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பாடலாக 'முத்து முத்து கருவாயா' பாடல் மாறி வருகிறது. முதன் முதலில் முகநூலில் வெளியாகிய இந்த பாடலை பல்லாயிரம் பார்வையாளர்கள்  ரசித்துள்ளதோடு வெற்றிப்பாடலாக அமையும் என்ற கருத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.

ஒருவர் தமிழ் சினிமாவில் கால் பதிப்பதென்பது இலகுவான விடயமல்ல. ஈழத்து  கவிஞர் தமிழ் சினிமாவில் பாடல் எழுதி அது வெற்றிப்பாடலாக கொண்டாடப்படுவது ஈழத்திலும்  சிறந்த திறமையான கலைஞர்கள் இருக்கின்றனர் என்பதற்கு ஒரு சான்றாகும்.

வாலியின் சந்தத்தையும் வைரமுத்துவின் முரண் அழகையும் தன்பாடலில்   உத்தியாய் பயன்படுத்தி வளர்ந்து வரும் அஸ்மின் சிறந்த மரபுக் கவிஞர். தேசிய ரீதியில் விருதுகள் பெற்றவர்.

கவிப்பேரரசு வைரமுத்து கவிக்கோ அப்துல் ரஹ்மான் ,மு.மேத்தா போன்ற பெருங்கவிஞர்களிடம் பாராட்டுப் பெற்றவர்.

இலங்கை வசந்தம் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக பணிபுரிந்து வருகின்றார்.

இதுவரை 12 திரைப்படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார்.அதில் 4 திரைப்படங்களுக்கு முழுப்பாடல்களையும் எழுதியுள்ளார்.

ஈழத்து கலைஞர்களுக்கு முன்னோடியாய் தமிழ் சினிமாவை கலக்கி வரும்  கவிஞர் அஸ்மின் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பாடலாசிரியராக வலம்வர எமது வாழ்த்துக்கள்.

Song Link:  https://www.youtube.com/watch?v=aHbQba1PaZs

வீடியோ

Previous Post Next Post