ஒலுவில் அஷ்ரப் நகர் தின்மக்கழிவு அகற்றல் நிலையம் யானைகளின் அட்டகாசத்தால் சேதம்-மக்கள் கவலை

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட ஒலுவில் அஷ்ரப் நகர் பிரதேசத்தில் அமைந்துள்ள திண்மக்கழிவு சேகரிப்பு நிலையம் காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் அதனை சுற்றி போடப்பட்டுள்ள பாதுகாப்பு வேலிகள் முற்றாக சேதமடைந்த நிலையில் காணப்படுவதோடு, கழிவுகள் யானைகளால் உடைக்கப்பட்ட பாதுகாப்பு வேலிகளை அண்மித்து கொட்டப்படுவதனால் துர்நாற்றம் வீசுவதாகவும் இப்பாதையினால் பிரயாணம் செய்யமுடியாதுள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
ஒலுவில் அஷ்ரப் நகர் பிரதேசத்தில் கடந்த காலங்களில் யானைகளின் தொல்லை அதிகரித்துக்காணப்படுவதாகவும், உப உணவுப் பயிர்ச்செய்கையாளர்கள், நெற்செய்கையாளர்கள் தங்களது பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ள சிரமப்படுவதாக குறிப்பிடுவதோடு, திண்மக்கழிவகற்றல் பிரிவு கடந்த காலங்களில் நேர்த்தியாக பராமரிக்கப்பட்டதாகவும், தற்போது அதனால் ஏற்படும் அசௌகரியங்களை சம்பந்தப்பட்ட நிறுவனமோ, அதிகாரிகளோ கண்டு கொள்ளாதிருப்பதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இக்கிராமத்தின் முக்கியமான பாதை ஒன்றிற்கு அருகாமையில் அமைந்துள்ள இக்கழிவகற்றல் நிலையத்தை பராமரித்து, யானைகளின் அட்டகாசத்தினை தடுக்க பொருத்தமான இடங்களில் யானை வேலிகளை அமைத்து இக்கிராம மக்களின் சுகாதரா மேம்பாட்டிற்கும், வாழ்வாதார உயர்வுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
-றிசாத் ஏ காதர்-
Previous Post Next Post