பொத்துவில் பிரதான வீதியில் விபத்து - ஒருவர் படுகாயம்

இன்று மாலை பொத்துவில் பிரதான வீதியில் நடந்த பேரூந்து விபத்தில் பொத்துவில் 6 ஐச் சேர்ந்த கலந்தர்(56) என்பவர் படுகாயமடைந்துள்ளார் .
குறித்த நபர் சிகிச்சைக்காக  பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார் .

இவ்விபத்து  குறித்து மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
-சம்சுல் ஹுதா-
Previous Post Next Post