மரண தண்டனையை அமுல்படுத்த அமைச்சரவை தீர்மானம்



(புவி)


நாட்டில் அதிகரித்து வரும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த மரண தண்டனையை அமுல்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக பெளத்தம அலுவல்கள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத செயல்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் நேற்றை தினம் பெளத்த மத அலுவல்கள் அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாட்டில் போதைப்பொருள் பரவல் மற்றும் அதனுடன் கூடிய குற்றச்செயல்கள் அதிகரித்துள்ள. இதனால் இன்று நாடே பாரிய நெருக்கடியினை சந்திக்க நேர்ந்துள்ளது. நாளுக்கு நாள் பொது மக்களும் பதிகப்படுகின்றனர். சட்டவிரோத செயல்கள் நாட்டில் ஏதோ ஒரு மூலையில் தினமும் நடக்கின்றது.

எனவே இந்த முக்கியமான பிரச்சினை குறித்து அமைச்சரவை கலந்துரையாடலின் போது கலந்துரையாடப்பட்டது. இதன்போதே இந்நிலைமையினை வன்மையாக கண்டிப்படுதற்கு சட்டங்களை இறுப்பப்படுத்தல் குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.

அமைச்சரவையில் அனைவரது நிலைப்பாடும் ஒருமித்த காணப்பட்ட நிலையில் அதனை ஜனாதிபதியும் ஏற்றுக்கொண்டார். இந்நிலையிலேயே சட்டம் ஒழுங்கு மற்றும் நீதி அமைச்சருடன் விரைவில் கலந்துரையாடி போதைப்பொருள் வர்த்தம் தொடர்பான குற்றவாளிகளுக்கு மரணதண்டனையை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார். இதன் மூலம் இதற்கு முன்னரும் போதைப்பொருள் வியாபாரத்தில் மரணதண்டனையை வழங்கப்பட்ட கைதிகளும் இது பொருந்தும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்மூலம் சிறையிலிருந்தவாறு போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோரையும் கட்டுப்படுத்தி போதைப்பொருள் வரத்தகத்தை முற்றாக அழிக்க முடியும் எனவும் மேலும் அவர் தெரிவித்தார்.

Previous Post Next Post