சுற்றுச் சூழலைப்பாதுகாக்க நாம் அனைவரையும் ஒத்துழைப்புடன் செயற்படவேண்டும் - தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர்.

நிந்தவூரில் இனிவரும் காலங்களில் பொதுச் சுகாதாரத்திற்கும் சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் கழிவுகளை கண்ட இடங்களில் வீசுபதைத்தவிர்த்து, நமது சுற்றுச் சூழலைப்பாதுகாக்க நாம் அனைவரும் ஒத்துழைப்புடன் செயற்படவேண்டும் என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் தெரிவித்தார்.
நிந்தவூர் பிரதேச சபை எல்லைக்குள் முறையற்ற முறையில் வீசப்பட்ட கழிவுகளை அகற்றும் வேலைத்திட்டம் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் அவர்களின் தலைமையில் நிந்தவூர் கடற்கரை வீதியில்  ஆரம்பித்து வைக்கப்பட்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர் ஏ.அஸ்பர் ஜே.பி, பிரதேச சபையின் மேற்பார்வையாளர்கள் மற்றும் பிரதேச சபை ஊழியர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
-எம்.ஏ.எம். முர்ஷித்-
Previous Post Next Post