குற்றத்துக்கான பொறுப்புக் கூறும் வயதெல்லை 12 ஆக அதிகரிப்பு

இலங்கையில் குற்றவியல் சட்டத்தின் கீழ் பொறுப்புக் கூறுவதற்கான வயதெல்லையை 12 வயதாக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நீதியமைச்சர் தலதா அதுகோரலவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கை சட்டத்தின் அடிப்படையில் இதுவரை காலமும் 08 வயதுக்கு குறைந்த சிறுவர்கள் மீது அவர்கள் புரியும் குற்றத்துக்கான பொறுப்புக்கள் சுமத்தப்படாது.

எனினும் இது மிகக் குறைந்த வயதாக உளவியல் வைத்தியர்கள் மற்றும் அதனுடன் தொடர்பான நிபுனர்களின் எண்ணமாக இருப்பதால், அதற்கான ஆகக் குறைந்த வயதெல்லையாக12 வயது வரை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை 12 வயதுக்கு அதிகமான மற்றும் 14 வயதுக்கும் குறைந்த சிறுவர்களுக்கு குறித்த குற்றம் தொடர்பிலான புத்திக் கூர்மை காணப்பட்டதா என்பதை கணிப்பிடும் அதிகாரத்தை மாவட்ட நீதவான்களுக்கு வழங்கும் வகையில் இந்த சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.

அதன்படி1979ம் ஆண்டின் 15ம் இலக்க குற்றவியல் நடைமுறைச்சட்டத்தை திருத்தம் செய்வது தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு அங்கீகாரத்தை பெற்றுக் கொள்வதற்காக பாராளுமன்றத்தில் சமரப்பிக்கப்பட உள்ளது.
-AD-
Previous Post Next Post