தேர்தல் சட்டங்களை மீறுவோரை கைது செய்ய 15,000 பொலிஸார்

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  நாட்டின் அமைதியை நிலைநாட்டுவதற்காக, 15 ஆயிரம் பொலிஸார் தற்போது கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
248 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்களை கோரும் நடவடிக்கைகள் நேற்றைய தினம் முதல் ஆரம்பமாகியுள்ள நிலையில், தேர்தல் நடவடிக்கைகளின் அமைதியை நிலைநாட்டுவதற்காக, பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக என்று, பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் சட்டத்துக்கு அமைய, நாட்டின் எந்தவொரு பகுதியிலும் எந்தவிதமான தேர்தல் பேரணிகளோ, கூட்டங்களோ நடத்த, முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பேரணி நடத்துவது தொடர்பான சட்டம், கடுமையாக அமுல்படுத்தப்படும் என்று தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர, இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது எனக் கூறினார்.

தேர்தல் சட்டங்களை மீறி, பேரணிகள் மற்றும் கூட்டங்களை நடத்தினால், அவர்களைக் கைது செய்து, தேர்தல் முடியும் வரையில் விளக்கமறியலில் வைக்க நேரிடுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
Previous Post Next Post