பைசருக்கு எதிராக ஜே.வி.பியும் நம்பிக்கையில்லா பிரேரணை

உள்ளூராட்சி மன்ற அமைச்சருக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி விரைவில் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவரும் அதற்கு அனைத்து கட்சிகளினதும் ஒத்துழைப்பையும் கோருவதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த காலங்களிலிருந்து தேர்தல் முறைமைகளில் திருத்தம் செய்ய கட்டாய தேவை ஏற்பட்டது. அதற்காகவே கடந்த காலங்களில் தேர்தல் காலம் தாழ்த்தப்பட்டது. இறுதியில் தேர்தலை நடத்தமுடியும் என்ற நிலைப்பாடு வந்தவுடன் அதற்கமையவே நவம்பர் 27ஆம் திகதி வேட்புமனுக்கள் கையேற்றபடுமென தேர்தல்கள் ஆணைக்குழுவும் அறிவித்திருந்தது.

அதன் பின்னர் தேர்தலை காலம் தாழ்த்த வேறு வழியில்லாமல் நீதிமன்ற முறைமையொன்றினூடாக தேர்தலை காலம் தாழ்த்த அரசாங்கம் முற்பட்டது. அந்த திட்டம் சாத்தியப்பட்டாலும் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு பிரதான காரணம் சுதந்திர கட்சியின் பிளவு என்பதே உண்மையாகும்.

சுதந்திர கட்சியின் மைத்திரி அணியானது எதிர்வரும் தேர்தலில ஒரு நெருக்கடியான நிலைப்பாட்டிற்கு முகம்கொடுக்கும் என்ற காரணத்தினாலேயே தேர்தல் காலம் தாழ்த்தப்படுகின்றது. இதனால் ஐக்கிய தேசிய கட்சி சிறந்தது என கூற முடியாது. மொத்த அரசாங்கமும் தேர்தலை நடத்தம் செயற்பாட்டில் பின்வாங்கியுள்ளது என்பதே நிதர்ஷனமாகும்.

எனவே தேர்தல் திட்டமிடப்பட்ட ஒரு சூழ்ச்சி செயற்பாட்டினை கொண்டு காலம் தாழ்த்தப்பட்டுள்ளது. காரணம் தற்போதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திர கட்சி அணியே தேர்தலை காலம் தாழ்த்தி வருகின்றது என்பதும் அவர்களே நீதிமன்ற செயற்பாடுகள் மூலம் தேர்தலை காலம் தாழ்த்துகின்றார்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

காரணம் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா ஜனாதிபதி சட்டத்தரணி அவர் சட்டம் பற்றி அறியாமல் இருக்க வாய்ப்பில்லை. எனவே அமைச்சர் கையொப்பத்துடன் இடப்பட்ட வர்தமானிக்கு எதிராக திட்டமிட்டு மைத்திரி அணியினராலேயே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனால் சாதாரண மக்களே பாதிக்கப்படுவார்கள். சாதாரண மக்கள் உள்ளூராட்சி மன்றங்களினாலேயே தமது தேவைகள் பலவற்றை பூர்த்தி செய்கின்றனர். அதனால் மக்கள் பக்கமிருந்து பார்கின்ற போதும் ஜனநாயகத்தின் அடிப்படையில் பார்கின்ற போது சட்டவிரோதமான செயற்பட்டினை முன்னெடுத்துவரும் அமைச்சர் பைசர் முஸ்தபா தொடர்ந்தும் உள்ளூராட்சி மன்ற அமைச்சராக பதவிவகிக்க தகுதியற்வர்.

எனவே அவரை அந்த பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்பதே மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடாகும். எனவே விரைவில் நாங்கள் அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளோம். அதற்காக அனைத்து கட்சிகளினதும் ஒத்துழைப்பையும் நாங்கள் கோருகின்றோம்.“ எனக் குறிப்பிட்டார்.
Previous Post Next Post