சிங்கள இனவாத சக்திகளுக்கும்,சில தமிழ் கூட்டமைப்பு இனவாதிகளுக்கும் மத்தியில் நாம் எமது சமூகத்திற்கான பணிகளை செய்ய வேண்டியுள்து-றிசாத் பதியுதீன்

சிங்கள இனவாத சக்திகளுக்கும்,சில தமிழ் கூட்டமைப்பு இனவாதிகளுக்கும் மத்தியில் நாம் எமது சமூகத்திற்கான பணிகளை செய்ய வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,கைத்தொழில்.வணிகத்துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் எமது சமூகத்தின் அனைத்து துறைகளையும்  தற்போதிருக்கும்  நிலையில் இருந்து உயர்த்தும் பணிக்கு அனைவரும் தங்களது ஒத்துழைப்பினை நல்குமாறு வேண்டுகோள்விடுத்தார்.
முஸ்லிம் கல்வி முன்னேற்றச் சங்கம் ஏற்பாட்டில் 2014 ஆம் ஆண்டு நடை பெற்ற கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் 9 பாடங்களிலும் ஏ சித்தியினை பெற்றுக்கொண்ட தேசிய ரீதியிலான மாணவர்களை பாராட்டும் நிகழ்வு கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லுாரி மண்டபத்தில் இன்று இடம் பெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் றிசாத் பதியுதீன் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அவர் தமதுரையில் கூறியதாவது –

அன்றிருந்த மறைந்த அரசியல் தலைவர்கள் கல்விக்காக பெரும் பணியாற்றியுள்ளனர்.மர்ஹூம் பதியுதீன் மஹ்முத்,டி.பி.ஜாயா உள்ளிட்ட இன்னும் பலரை இந்த நேரத்தில் நினைவு கூறுவது பொருத்தமாகும்,

அவர்களின் பிற்பாடு முஸ்லிம் சமூகத்தின் கல்விக்காக மர்ஹூம் நளீம் ஹாஜியார் அவர்கள் ஆற்றிய பணிகளை பாராட்டாமல் இருக்க முடியாது.அவரது ஆரம்பம் மிகவும் வறுமையானதாக இருந்துள்ளது.அவர்களது எண்ணங்கள் அல்லாஹ்விடத்தில் பெரிமதியாகியுள்ளது.

இது போல் சமூகத்தில் உள்ள தனவந்தர்கள் முன்வந்து சமூகத்தின் கல்வி உள்ளிட்ட ஏனைய விடயங்களுக்கு தங்களது பங்களிபிப்பினை வழங்க வேண்டும்.என்னை பொறுத்த வரையில் நான் எனது ஆரம்ப கல்வியினை தொடர எதிர்கொண்ட சிரமங்களை இன்று இங்கு கூறுவது பெறுமைக்காக அல்ல.

ஒவ்வொருவரிடமும் வரலாறு இருக்கின்றது என்பதற்காக,

நான் கடந்த தேர்தல் காலத்தில் கொண்ட எண்ணம் தான் அடுத்துவரும் 5 வருடங்களுக்குள் எமது சமூகத்தின் கல்வித்துறையில் ஒரு அதிகரிப்பை கொண்டுவர வேண்டும் என்று அதற்காக கடந்த வாரங்களாக க.பொ.த.சாத தரப்பரீட்சைக்கு  தோற்றும் மாணவர்களுக்கான ஒரு முன்னோடிப்பரீட்சையினை ஏற்பாடு செய்து நடத்தியுள்ளோம்.

இதுமட்டுமல்லாமல் 25 மாவட்டங்களிலும் மாணவர்களின் அடைவுகள் தொடர்பிலும்,பாடசாலைகளின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பிலும் ஒரு ஆய்வினை செய்துவருகின்றோம்.அதனது அறிக்கை கிடைத்ததும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம்.

இது அரசியல்,கட்சி ரீதிகளுக்கு அப்பால் பட்ட செயற்பாடாகும்..இதில் எவரும் இணையலாம் என அழைப்புவிடுக்கின்றேன்.

கல்வி துறை போன்று ஊடகத் துறை மற்றும் இன்னோரன்ன துறைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தவுள்ளோம்.10 சதவீதமாக வாழும் இலங்கை முஸ்லிம்களின் துறைகளின் அடைவு என்பது மிகவும் குறைவானதாக இருக்கின்றது.

வைத்தியர்கள்,பொறியியலாளர்கள்,உள்ளிட்ட இன்னும் பல துறைகளின் தேவப்பாடுகள் எமது சமூகத்திற்கு மேலும் அவசியமாகும்.இதனை அடைந்து கொள்ள திட்டமிட வேண்டியுள்ளது.வருடாந்தம் நாம் எல்லா துறைகளிலும் பத்து சதவீதத்தை எட்ட வேண்டும்,அதற்காக தற்போது உதயமாகியுள்ள இந்த கல்வி அமைப்புக்களின் செயற்பாடுகளுக்கு நாம் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.

எதிர்வரும் 19 ஆம் திகதி சில இனவாத அமைப்புக்கள் பாரியதொரு ஆர்ப்பாட்டமொன்றினை ஏற்பாடு செய்துள்ளதாக அறிகின்றேன்.அது வில்பத்து தொடர்பாகவும்,அங்கு முஸ்லிம்களின் குடியேற்றம் தொடர்பாகவும்,இனவாத அமைப்பினர் இதனை செய்யவுள்ளதாகவும்,வில்பத்துக்குள் எமது மக்கள் குடியேற்றப்படவில்லை,நான் அந்த பிரதேசத்திற்கு  சென்று பல மாதங்கள் ஆகின்றன,அது போல் முல்லைத்தீவு முறிப்பு பிரதேசத்தில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மேற்கொள்ளும் எதிர்பபுக்கள் தொடர்பில் நாம் கடும் வேதனையடைந்துள்ளோம்.

இந்த அரசியல் பிரவேசம் என்பது சமூகத்தின் உரிமைகளுக்காக என்பதை ஒரு போதும் எம்மால் மறந்து செயற்பட முடியாது,அதனை அமானிதமாக நாம் ஏற்று செயற்பட வேண்டும்.

நேற்று முன்தினம் இல்ஙகையில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களில் உள்ள முஸ்லிம் மஜ்லிஸ் அமைப்பினரை அழைத்து அவர்களை பிரதமர் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ஆகியோரை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்து,அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடலொன்றினை நடத்தியுள்ளோம்.

இதன் மூலம் எதிர்கால சமூகத்திற்கு இந்த மாணவர்கள் வழிகாட்டிகளாக மாறுார்கள் என நம்பிக்கை வெளியிட்ட அமைச்சர் றிசாத் பதியுதீன் எமது சதவீத்துக்கும் அதிகமாக 28 சதவீதமானவர்கள் சிறைகளில் வாழுகின்றனர்.இவர்களது எண்ணிக்கையினையும் குறைப்பது எமது பொறுப்பாகும் என்றும் கூறினார்.

இந்த நிகழ்வில் ஜக்கிய அரபு ராஜ்யத்தின் இலங்கை்கான துாதுவர்,உள்ளிட்ட கல்விமான்கள் மற்றும் துறைசார்ந்தவர்கள்,உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் எனபலரும் கலந்து கொண்டனர்.
-இர்ஷாத் றஹ்மத்துல்லா-

Previous Post Next Post