பேஸ்புக் போன்று இலங்கையில் 1வது பிரபல சமூகவலைத்தளம் அறிமுகம்.

இன்றைய உலகத்தை சமூகவலைத்தளங்களே ஆட்சி செய்கின்றன என்றால் மிகையாகாது. அதிலும்குறிப்பாக Facebook, Twitter போன்றன உலகளவில் முன்னுரிமை வகிக்கின்றன.
 இது இவ்வாறு இருக்கையில் தற்பொழுது இலங்கைக்கான தனியானதும், முதன்மையானதுமான சமூக வலைத்தளமாக "லிங்லங்.கொம்" www.linklank.com எனும் இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது தற்பொழுது வாடிக்கையாளர்கள் கணக்குகளை திறக்கக்கூடிய வகையில் வெளியிடப்பட்டுள்ளபோதிலும் 2016.01.01 புது வருடத்திலிருந்து உத்தியோகபூர்வமாக இயங்கும் என்பதும் இது இலங்கைக்கான சமூகவலைத்தளம் என்பதனால் வாடிக்கையாளர்கள் கணக்குகள் திறப்பதில் அதிகம் ஆர்வம் காட்டிவருகின்றனர்.என்பதும்குறிப்பிடத்தக்கது.
இதிலும் குறிப்பாக Facebook போன்று இலங்கையிலுள்ள அனைவரும் கணக்குகளினை இலவசமாக திறந்து கொள்ளமுடியும். இதில்Newsfeed, Like, Share, Comments, Events, Groups, Chat போன்று இன்னும் பல சேவைகளும் உள்ளடக்கப்பட்டு வாசகர்களை கவரும்வகையில் அழகியதோற்றத்தில் அமைந்துள்ளது.

இவை தவிர விசேடமாக Free jobs, User profile counting options, Point batch system, News feed filtering option போன்ற பல சேவைகளையும் LinkLank (லிங்லங்) தன்னகத்தேகொண்டுள்ளது.
இனி எதிர்வரும் காலத்தில் Facebook போன்று இலங்கைக்கான தனித்துவ மற்றும் முதல்தரமான சமூகவலைத்தளமாக LinkLank அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை எனலாம்.
-M Mohamed Rizwan-


Previous Post Next Post