சனத்தொகை அதிகரிப்பதினால் நாம் வாழும் புவிக்கோளம் பாரிய சூழல் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றது

சனத்தொகை அதிகரிப்பதினால் நாம் வாழும் புவிக்கோளம் பாரிய சூழல் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றது.
மனிதனால் ஏற்படுத்தப்படும் சட்டவிரோத செயற்பாடு காரணமாக சுற்றுச்சூழல் பாரிய அனர்த்தத்தை ஏற்படுத்துகின்றது. சுற்றாடலில் இருக்கும் மனிதன், விலங்குகள், உயிரினங்கள் போன்றன புவிக்கோளத்தில் வாழமுடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

மனிதனின் தேவைகள் நாளுக்கு நாள் நவீன தொழிநுட்ப யுகத்தில் சென்று கொண்டிருக்கின்ற வேளையில் மனிதனின் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்பட வேண்டியது நாட்டினது  அரசியல் கொள்கையாகும். தற்போது பருவமழை பெய்து கொண்டிருக்கின்றது. இந்த பருவமழை காரணமாக வெள்ள நீரானது பொதுமக்களின் இருப்பிட காணிகளிலும், வீடுகளிலும் உட்புகுந்து பொது மக்களின் நிம்மதியை இழந்து தங்களின் அன்றாட வாழ்க்கையை வீணடிக்கின்றது.

சிறிய தூறல் மழை பெய்தாலும் பாரிய வெள்ளக்காடாக காட்சிதரும் கிராமமாக போரதீவு பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பட்டாபுரம் கிராமம் காட்சி தருகின்றது.

இந்த கிராமத்தில் 176 குடும்பங்களைச் சேர்ந்த 320 பேர் வசிக்கின்றனர். இவர்களுக்குத் தேவையான குடிநீர் வசதி, வீதிவசதி, மலசலகூட வசதி, வீடு வசதி போன்றன தற்போது நல்லாட்சியமிக்க அரசாங்கத்தினால் நிவர்த்தி செய்து கொடுக்கப்படவில்லை.

முறையான வடிகாலமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தினால் வீதியில் சுமார் 03அடி தண்ணீர் தேங்கி நின்று பாடசாலை மாணவர்கள், அரசஊழியர்கள், அதிபர், ஆசிரியர்கள் தங்களின் போக்குவரத்து வசதியினை முன்னேடுக்காத துர்ப்பாக்கிய நிலையில் இக்கிராமம் வெள்ளக்காடாக காட்சி தருகின்றது.

அதேபோன்று 100க்கு மேற்பட்ட கிரவல் வீதிகள் சேறும் தண்ணீருமாக காட்சி தருகின்றது. பெரிய மழை பெய்ந்தால் தங்களின் இருப்பிட காணிக்குள் வெள்ளம் புகுந்து வீட்டிற்குள்ளும் இருக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகின்றது.

இதனால் இக்கிராம மக்கள் தங்களின் இருப்பிடத்தை விட்டு உயர் பாதுகாப்பு இடத்தை நோக்கி அகதிகளாக இடம்பெரும் நிலை இக்கிராம மக்களுக்கு உண்டு. வெள்ளம் உட்புகுவதனால் வீட்டினுள் இருக்கும் அடிப்படை வசதிகள் வெள்ளத்தினால் மோசமடைகின்றது. தங்களின் நித்திரையை நிம்மதியாக கழிப்பதற்கு படுக்கை இருப்புக்கள் இல்லாமல் குளிரிலும், வெறும் நிலத்திலும் அகதிமுகாம்களில் படுக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது.

இக்கிராமத்தில் உள்ள மக்கள் மட்பாண்ட கைத்தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர். ரூபா 3000க்கு ஒரு உழவு இயந்திர கழிமண்ணைப்பெற்று மட்பாண்ட கைத்தொழிலை மேற்கொள்ளும் வறிய மக்களின் தொழில் பாதிக்கப்படுகின்றது. தேர்தல் காலங்களில் படையெடுத்து வரும் அரசியல்வாதிகள் தேர்தல் காலத்தில் மட்டும் தங்களை கரிவேப்பிலையாக பயன்படுத்தி வாக்கு கேட்டு செல்கின்றனர். தேர்தல் கால வாக்குறுதிகளை நம்பி இக்கிராம மக்கள் ஏமாந்து வருகின்றனர்.

தங்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து தருவோம் என வீரவசனம் பேசும் அரசியல்வாதிகள் தேர்தல் முடிந்தபின் தங்களின் கிராமத்தை எட்டி பார்ப்பதில்லை என பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே இக்கிராமத்தின் வீதிகளை கொங்கிறீட் வீதிகளாகவும், நவீன திட்டமுடன் கூடிய வடிகால் அமைப்பு வசதிகளையும், மலசலகூட வசதிகளையும் இக்கிராம மக்களுக்கு பெற்றுக்கொடுப்பது யார்? மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதிகள், அரசஅதிகாரிகள் போன்றவர்கள் இக்கிராம மக்கள் மீது கவனம் செலுத்தி வெள்ளநீரை அகற்றுவதற்கு பாரிய வேலைத்திட்டம் மேற்கொள்ள வேண்டுமென இக்கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
-க.விஜயரெத்தினம்-

Previous Post Next Post